அன்பு என்பது

அன்பு என்பது



தாயின் அரவணைப்பில் காண்பது
தந்தையின் செயல்களில் தெரிவது
தமையனின் சொல்லில் புரிவது
தமக்கையின் மென்மையில் உதிப்பது
தம்பியின் கொஞ்சலில் விளைவது
தங்கையின் கெஞ்சலில் கரைவது
நண்பனின் சிரிப்பினில் மலர்வது
மனைவியின் கண்களில் ஒளிர்வது
மகவுகளின் உள்ளத்தில் ஒலிப்பது
மாயவனின் லீலைகளில் உறைவது.

எழுதியவர் : ராம் (12-Feb-15, 3:58 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : anbu enbathu
பார்வை : 90

மேலே