புரிதல்கள்

வடதுருவத்தில் நின்று பார்க்கையில்
திரும்பிய திசையெல்லாம் தெற்கு;
உயரப்பறந்து விண்வெளியில் மிதந்தால்
மேலே என்று நினைத்ததெல்லாம் கீழே;
கடல் மேலெழும்பி கார்மேகமானதோ
கார்மேகம் பொழிந்து கடலாய் மாறியதோ;
நிலவுக்கு ஒளியூட்டும் கதிரவன் என்றால்
கதிரவன் காலமெல்லாம் ஒளிவிடும் தீப்பிழம்பு?
தூரத்தை அளந்து காலத்தை அளந்து முடிவில்
ஒளியாண்டு என காலத்தால் தூரத்தை அளந்தோம்;
விடைகள் தேடினர் வேதத்திலும் கீதையிலும்
பைபிளிலும் திரு-குரானிலும் மெய்ஞானிகள் ;
இயற்பியல் வேதியியல் கணிதவியல் என
காலம் முழுதும் தேடுகின்ற விஞ்ஞானிகள் ;
எது எப்படி இருப்பினும் ஒன்று மட்டும் புரிந்தது;
இதுவரை நம் புரிதல்கள் ஒன்றுமில்லை என்று !