என் பட்டமளிப்பு விழா -- அரவிந்த்
பட்டமளிப்பு விழா..
என்ற அறிவிப்பு
என் செவிகளுக்கு எட்டிய பொழுது
கனத்து போனது என் நெஞ்சம்....
எனக்கும் கல்லூரிக்கும்
மிச்சம் இருந்த
சிறு உறவும்
முடிந்து விட போகிறது என்று...
கண் மூடினேன்
கணப்பொழுதில்
கடந்து சென்றேன்
கல்லூரி நாட்களுக்கு...
சிறு பயத்துடன் முதல் அடி
எடுத்து வைத்து நுழைந்த வகுப்பறை..
வந்ததும் என்னை வரவேற்ற
என் கடைசி இருக்கை...
அமர்ந்ததும்
அறிமுகம் ஆகிய நண்பர்கள் என்று
ஆரம்பித்தது முதல் நாள்...
நாட்கள் நகர நகர
நெருக்கமாகினோம்..
மாமா மச்சான் என்று உறவுமுறைக்குள்
முழ்கி போனோம்..
காரணம் இல்லா சிரிப்புகள்
உரிமை கொண்ட கோவங்கள்
என்று வளர்ந்தது
எங்கள் நட்பு...
ஆண் பெண்
வேறுபாடுகள் வெட்டுப்பட்டு போக
பழக்கம் ஆகிய
பெண் தோழிகள்...
கிண்டல் அடித்து நகைத்து
திரிந்த காலங்கள்
நிற்கிறது கண்ணோடு...
தேர்வுக்கு முன் இரவு
உறக்கம் இன்றி
படித்த நேரங்கள்
திரும்ப வருமோ இனி...
தேர்வின் தோல்விகளும்
தோழனின் துணை இருக்க,
துவண்டு போகாமல்
கிண்டலாக மாறியது...
சில ஆசிரியர்களின்
சொல் கேட்டு,
சில ஆசிரியர்களை
வம்பிழுத்து ,
குழந்தைத்தனமான செயல்களால்
kadankodam காலத்தினை
என் கிண்டலால்
என்னை வெறுத்த சிலர்
இருந்தும் 'நான் நட்பை விரும்பிய பலர்'
என்று வகுப்பறைக்குள் தினமும் கேலி கூத்துகள்...
நேற்றைய நினைப்பு இன்றி
நாளைய கவலை இன்றி
பாடும் வனம் பாடியாய்
பாடி திரிந்த கல்லூரி காலம்...
என்னை அறியாமல்
கசிந்தது
கண்ணீர்த்துளிகள் கண்களில்...
மாணவனாய்..
தோழனாய்..
தோழியாய்..
நான் சுற்றிய என் கல்லூரி வளாகம்,
வீசி விட்டது எங்களை வெளியே...
இறுதியாய் ஒரு முறை
பார்த்துக்கொள்ள அழைப்பிதழ்,
ஒருபுறம் வலித்தது
ஒருபுறம் இனித்தது...
நான் "நாங்களாய்"
சாய்ந்து நின்ற கல்லூரி
சுவர்கள்...
அமர்ந்து இருந்த
இருக்கைகள்...
உணவு அருந்திய
உணவிடங்கள்..
திட்டுவாங்கிய
ஆசிரியர்கள்...
என்று அனைத்தையும் அனுபவிக்க
ஒரு நாள் ...
ஆனால் நான்
மாணவன் அல்ல
என்ற ஒரு உணர்வு
குத்தி கொண்டே இருக்கிறது...
மீண்டும் பழைய நட்பு
நிலைத்திருக்குமோ அனைவரிடமும்
என்னும் கேள்விகள்
என்னை குடைந்து கொண்டிருக்க,,.
அந்த ஒரு
நாளை நோக்கி
ஏங்கி காத்துக்கொண்டு
இருக்கிறேன் நான்....
என் பட்டமளிப்பு விழா...