நண்பர்களுடன் வாழ்வோம்

உன் முகம் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உற்சாகமுள்ள
நாளிகைகளாக.....!
உனக்காக வாழும்
ஒவ்வொரு கணங்களும்
உயிரோட்டமுள்ள
வாழ்க்கை பக்கங்களாக....!
உன்னோடு பேசும்
ஒவ்வொரு நொடியும்
உண்மை அன்புக்கான
உயிர்ப் பூக்களாக...!
உண்மை நட்புகளுடன்
உயிர் மூச்சுள்ள வரை
ஒன்று கூடி வாழ்வதே
வாழ்வின் உண்மை வெற்றி
நண்பர்களுடன் வாழ்வோம்
நட்பை நேசிப்போம்
நாளும் இன்ப வெள்ளத்தில்
நனைந்தே மகிழ்ந்திடுவோம்.