என் நண்பேண்டா

"எல்லைத் தாண்டி கடக்க நினைப்பேன்
என் நண்பனின் நட்பிலும் அவன் நினைவிலும்"

கழுத்தில் கத்தி பட்டாலும்
உடம்பில் விஷம் ஏற்றினாலும்
என் உடம்பில் இருந்து கலைந்துவிடாத உறவு நட்புதானே நண்பா!

என் இதயம் திருடப் படுவதும்
என் கண்கள் திறக்கப் படுவதும்
உன்னால்தானே உனக்காகத்தானே நண்பா!

கோவம் வந்தால்
என் காதலியே
என் இதயத்தை விட்டுத் தள்ளி இருப்பாள்
ஆனால்
கோவம் வந்தும்
சண்டை வந்தும்
பலநாள் என் இதயத்தில் இருந்தான்
அவன்தான் என்னோட நண்பன்!


துடிக்கும் ஒவ்வொரு இதயமும்
அதிகாமாக விரும்பும் ஒரே ஒரு உயிர்
இந்த உலகத்தில் நண்பர்களை மட்டும்தான் நண்பா!


சொந்த பந்தம் இல்லாதா மனிதனுக்கு
பல சொந்த பந்தம் கொடுத்து
அவன் சோகத்தை குறைப்பவர்கள்
இந்த உலகத்தில் நண்பர்கள் மட்டும்தான் நண்பா!

உன்னோடு இருந்தவரை
ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட
நான் என் கண்ணில் பார்த்ததே இல்லை

ஆனால் இன்று
பல சொட்டுக் கண்ணீருக்கு பதில் அளிக்கிறேன்
என் நண்பனின் இந்த பிரிவு நிரந்தரம் இல்லை என்று!

என்னுள் வசந்தகாலம்
என் கல்லூரிக்காலம் நண்பா!

BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI................

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (12-Feb-15, 7:11 pm)
பார்வை : 251

மேலே