தினமாம் காதலாம்

காட்டுப்பூவில்
காதல் வளர்த்து
கண்ணாடிப்பெட்டியில்
மிதந்துச் சொலிக்கும்
தாஜ்மகாலை
வாங்கியதேயில்லை
தாத்தா.
முட்டிமடக்கி
இதயபொம்மையோடு
கெஞ்சப்படாமலும்
முட்டி தேய்ந்து
முடியாமல்
விழுந்தபின்னும்
காதலுடனே வாழ்ந்தார்
பாட்டி.
வண்ணவார்த்தைகளால்
வாழ்த்து அட்டைகளின்றி
பத்திரப்படுத்தியிருக்கிறார்
தங்கள் திருமண அழைப்பிதழை
அப்பா.
பதட்டத்துடன்
தனிபாணியில்
முடி கோதி
அவர் நெருங்கும்போதே
எனக்குத் தெரியும்....
நரைத்த பின்னும்
அப்பாவின்
சிகையலங்காரத்தை
மெச்சுகிறார்
அம்மா.
வியாபார திணிப்புகளை
தூரத்தள்ளியவர்கள்
இவர்கள்.
தினம் வைத்துக்
கொண்டாடவில்லை.
ஒவ்வொரு தினமும்
காதலைக்
கொண்டாடியவர்கள்
நாம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (13-Feb-15, 8:40 am)
Tanglish : thinamam kadhalam
பார்வை : 96

மேலே