புரிதல் ஹைபுன்

*
இடுப்பில் இருக்கும் குழந்தை, அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம் அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித் தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில் எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது குழந்தை
பக்கத்து வீட்டார் உறவு
எலியும் பூனையும் சண்டை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (13-Feb-15, 9:20 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 127

மேலே