வரலாற்று யாத்திரைகள் 10

வரலாற்று யாத்திரைகள் 10
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அது ஓர் அடர்ந்த காடு. கதிரவன் உச்சியில் ஏறும் முயற்சியில் இறங்கிது.

ஒரு வயதான பெண்ணை ராணுவத்தினர் சந்திக்கின்றனர். அவரிடம் 'இந்த பக்கம் படை வீரர்கள் யாரையாவது பார்த்தீர்களா' என்று விசாரித்தனர்.

அந்தப் பெண் ஏதோ நினைத்தபடி தலையசைத்து 'ம்ம்ம்ம் பார்த்தேன், ஆனால் புதிய முகங்களாக இருந்தது அவர்கள் யார் என்று தெரியவில்லை. அதோ, அந்த நதிக்கரைக்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்' என்றார்.

உடனே ராணுவ அதிகாரியின் முகம் சிறு மாறுதல் பெற்று பிரகாசித்தது.உடனே ராணுவ வீரர்கள் அனைவரும் விரைவாக நதிக்கரையை கடந்து, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

'அவர்கள் இங்கு தான் இருக்க வேண்டும், விரைவாக தேடுங்கள்' என்றார் தலைமை அதிகாரி மெல்லிய குரலில்.

வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது. ஒருவழியாக தேடுதல் முடிந்தது, புரட்சிப்படை வீரர்களின் முகாமை கண்டுபிடித்தது ராணுவம். சற்றும் எதிர் பார்க்காதவாறு தோட்டாக்கள் சீறின.... அது இரண்டு படைவீரர்களின் உடல் துளைத்து, சதை கிழித்து, உயிர் பறித்தது.

ராணுவத்தினர் சுற்றி வளைத்ததை அறிந்த புரட்சிப்படை வீரர்கள், துப்பாக்கிகளை ராணுவத்தினரை நோக்கி இயக்கினர்... இரு தரப்பிடமும் ஆவேசம் அதிகரித்தது, தோட்டாக்கள் தொடர்ந்து சீறின... டப் டப் டப் டப் டப்....

துப்பாக்கி சத்தங்களை இதுவரை கேட்டிடாத அந்த காட்டின் பறவைகளும், விலங்குகளும் அங்கிருந்து ஓடி ஒளிந்து கொண்டன.

புரட்சிப்படை வீரனான வில்லி கத்தினான் 'சே, உங்களை நெருங்கிவிட்டார்கள் ' சே அதையும் கவனிக்காமல் துப்பாக்கியை இயக்கிக் கொண்டிருந்தார்.

இப்போது சேவுக்கும் ராணுவத்தினருக்கும் பத்தடிதான் இடைவெளி. இத்தனை நெருக்கடியிலும் சேவின் வீரத்தின் சாதுரியம், இதுவரை யாரும் காண கிடைக்காத ஒன்று.
சே'வை குறிப் பார்த்து பாய்ந்தது ஒரு ராணுவ வீரனின் தோட்டா, அவரது காலை பதம் பார்த்தது. சட்டென்று கைதவறி கீழே விழ வந்த துப்பாக்கியை இருக்க பிடித்தார். இரண்டாவது தோட்டா அவரது தொப்பியை சிதறடித்தது.

வில்லி பதற்றத்தில் செய்வதறியாது கோபத்தோடு இன்னும் வேகம் கூட்டி சுட தொடங்கினார்.
சே'வோடு இணைந்த சரபியா எதிரில் இருந்த ராணுவ வீரர்களை சரமாறியாக சுட்டுக் கொன்றார்.
சே'வின் காலில் ரத்தப் போக்கு அதிகமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் துப்பாக்கியால் எதிரிகளின் உடலை துளைத்தார்.

ராணுவத்தினர் அனைவரையும் சுட்டுக்கொன்றனர் புரட்சிப்படை வீரர்கள். சே தன் காலை துளைத்த தோட்டாவை தானே எடுத்துவிட்டு, அதற்கு முதலுதவி செய்து கொண்டார்.

சரியாக மாலை 3.30 மணிக்கு சேகுவேரா பொலிவிய ராணுவத்தினரை கொன்றுவிட்டார். ரேடியோ செய்திகள் பறவ தொடங்கின.

அடுத்த நாள் சே தனது கடித்தை பொலிவிய தலைமை ராணுவத்திற்கு அனுப்பினார்.

'நான் வீழ்வேனென்று நினைதாயோ!

எங்களின் கெரில்லாப் போரில் விரைவில் வெற்றி காண்போம்.

பொலிவியாவில் விரைவில் புரட்சி அரசாங்கம் அமைப்போம்.

லத்தீன் அமெரிக்கா முழுதும் அடுத்தடுத்து எங்களின் புரட்சி தீ பரப்புவோம்.

சி.ஐ.ஏ.,வின் அனைத்து வஞ்சக நினைப்பையும் அழிப்போம்

எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம்' என்று அக்கடிதத்தில் எழுத்தப்பட்டிருந்தது.

இதனை படித்த ராணுவ அதிகாரிகள் திகைத்து நின்றனர்.

எழுதியவர் : கோபி சேகுவேரா (13-Feb-15, 8:58 pm)
பார்வை : 140

மேலே