உணவே கனவு

( ஒரு ஆண்டிற்கு மட்டும் லச்சக்கணக்கான டன் உணவு வீணடிக்கபடுவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது அதன் அடிப்படையில் எழுதப்பட்டது)

கண்களின் வேலை
குப்பைத்தொட்டியை
தேடுவது!

உடலின் வேலை
தினம் நாய்களோடு
சண்டையிடுவது!

பிஞ்சு கைகளின் வேலை
ஒருவாய் கஞ்சிக்காக
கையேந்துவது!

இத்தனைக்கு பிறகும்
கிடைக்கவில்லை

உணவானது
மனித கழிவுகளே
மனிதனுக்கு!

அங்கே
ருசிக்கு எதை உண்பது
தேர்ந்தெடுக்க முடியாமல் மயக்கத்தில் !

இங்கே
பசிக்கு எதை உண்பது
எதுவும் கிடைக்காமல்
மயக்கத்தில்!

வீணாகும் உணவு எல்லாம்
இவர்களுக்கு கிடைத்திருந்தால்
பசியால் உயிர் போகும் அவலம்
வந்திருக்காது!

கோடி கோடியாய் வைந்திருந்தும்
இறந்தால்
கறையானே உடல் அரிக்கும் தெரிந்திருந்தும்

ஒரு முறை கூட
கொடுக்க பணமில்லை
காரணம் மனமில்லை!

கோடிஸ்வரனாய்
தொழிலதிபராய்
உலகை ஆளும் மன்னனாய்
யாரக வேண்டுமானாலும் இரூ

இறந்ததும்
துறந்துவிடும்
உனது பெயரும் பணமும்

புதிய பெயர் வந்திடும்
பிணமும் சவமும்

இருக்கும் காலத்திலேயே
இருக்கின்றவற்றை சிறிது
கொடுத்து பசி தீர்த்தாலே

இறக்கும் காலத்திலும்
உனக்காக சில இதயம்
உண்மையாய் துடிக்கும்
அன்பு கண்ணீர் வடிக்கும்!

உண்ணும் உணவை வீணாக்காதீர்கள்
சிந்தும் ஒவ்வொரு பருக்கையும்
ஒரு உயிரின் இருக்கை!

எழுதியவர் : சபியுல்லாஹ் (14-Feb-15, 7:11 pm)
Tanglish : unave kanavu
பார்வை : 661

மேலே