வேலையைப் பார்ப்போம்

நாசம்..
மோசம்..
நரகம்..
தேகம்..
மூலை..
முடுக்கு ..
என்னப்பா இது..
சுத்தமா நினைவில் எதுவும்
சுத்தமா தெளிவா..
வர மாட்டேங்குது..
சரி..சரி..
பிரஷரை ஏத்துற
எதையும் செய்யாதீங்கன்னு
டாக்டர் சொன்னது
சரியாத்தான் இருக்குது..
நாளக்கி
எண்பதாம் வயது பூர்த்தி ஆவுது
அந்த வேலையப் பாப்போம்.
எங்கே போச்சு என் கண்ணாடி
தேடனும் அத ..
கவிதை எழுதும் முன்னாடி!
..
அப்...பா..!

எழுதியவர் : கருணா (14-Feb-15, 5:20 pm)
Tanglish : velaiyaip paarppom
பார்வை : 133

மேலே