காதல் வயல்
என் மனதை
ஏர் போல் உழுதாய்
உன் நினைவுகளை
விதை நெல்லாய்
என் நெஞ்சில் விதைத்தாய்
பார்வைகளால் தண்ணீர்
பாய்ச்சினாய்
கண் சிமிட்டல்களில்
களை எடுத்தாய்
பச்சை வயல்களில்
இச்சை கிளியாய்
இசை பாடினாய்
முற்றிய நெற்கதிர்களில்
முகம் காட்டினாய்
வயல் வெளியின்
விளைச்சல் போல்
வாழ்க்கை வெளியில்
விளக்கேற்றுவோம்