மழலைப் பாடல்
மரமும் பையனும்
......
குட்டிப் பையன் நட்ட செடி
குடைபோல் வளர்ந்திருச்சி
டொக் டொக் என்று கொட்டும்
மழையிலும் கூடி விளையாட
இடம் கொடுத்திருச்சி குட்டி
மரம் வளர்ப்போம் வெட்டி
விடாமல் இருப்போம்
சின்னப்பாப்பாவும் பட்டாம் பூச்சியும்
..........
இறகை தட்டித் தட்டி பட்டாம் பூச்சி
பட்டுப் பட்டு என்று பல மலரைத் தொட்டது
தட்டித் தட்டி வந்த பட்டாம் பூச்சி மஞ்சல்
மலர் மேலே கொஞ்ச நேரம் அமர்ந்தது
ஒட்டி ஒட்டி ஓடிப் போனாள் தொட்டுப்
பிடிக்க சின்னப்பாப்பா
பட்டனப் பறந்தது ஒரு திசையை நோக்கி
எட்டிப் பார்த்தபடியே திகைத்து நின்றாள்
சின்னப்பாப்பா......