காக்கைச் சிறகினிலே - இன்னும் சற்று நொடிகளில் - போட்டிக் கவிதை

காக்கைச் சிறகினிலே
கடுகின் தோலினிலே
காலை நேரத் தேநீரினிலே
கவிதை பாடும் குயிலினிலே

கனிந்த நல் மஞ்சனத்திப் பழம் தனிலே
இனிக்கும் தேன் கரும்பினிலே
மணக்கும் அகர் பத்திகளிலே
மாலைச் சூரிய மறைவினிலே
மந்திகள் ஆடும் இருள் தோப்பினிலே

நிலவு மறந்த வானிலே- கதிரவன்
களவு போன பகலினிலே
உழவர் யாக்கை நிறம் தனிலே
உறுதியான இரும்பினிலே
உதிரி நாவல் பழங்களினிலே
பரிதியின் பல் படாத பூமியிலே

கற்பரசி கண்ணகி சிலைதனிலே
காக்கைச் சிறகினிலே - உழைப்பவர்
யாக்கை நிறம் தனிலே - உந்தன்
தக்கை விழிகளின் நிறம் தோன்றுதடி நந்தலாலா...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (15-Feb-15, 10:49 am)
பார்வை : 164

மேலே