நட்பே

1. நினைவில் நின்றவனே நித்தமும் நீயாகி
நிழலாய் தொடர்கிறாய் உணர்வில் உறைகிறாய்
நின்னையன்றி நித்திரையும் கனவும் நீயானாய்
நீயில்லையென எப்படிச் சொல்வேன் நட்பே
நீயே நானான கதையை
நீ தூரத்தில் இருந்தும்
தூரமின்றி உடன் இருப்பதை...

2. நினவலையில் நீர்க்காமல் மனதோடு
நின்றாடும் என்னுயிரே தன்னோடு
நிழலிலும் நிஜத்திலும் என்னோடு
நீயே வருகிறாய் என் நட்பே - என்னையறியாமல்
என் உள்ளோடும் உணர்வோடும்
எப்படி நுழைந்தாயோ....

3. உன்னோடு நான் பயணித்ததை
உள்ளதோடு உணர்கிறேன் நொடியும்
உயிராய் ஆனவனே உதிரமும் நீயானாய்..
உள்ளே உள்ளோடி வெளியே நானாய்
என் நட்பே...

எழுதியவர் : (15-Feb-15, 11:37 pm)
சேர்த்தது : avighaya
Tanglish : natpe
பார்வை : 197

மேலே