என்றும் அன்புடன் இரு

நெஞ்சில் துன்பம் நெருங்கையில்
நேசன் அவனை நெருங்கிச்செல்
கொஞ்சம் நினைத்துக் கொண்டிடுவாய்
கொதிக்கும் உள்ளம் தனிந்திடுவாய்

அயலவனை அரவணைத்து
நல் அன்பிட் கலந்து தினம் மதித்து
செயலில் குற்றம் செய்ய நினைக்கும்
அவன் செயலை விடுவிப்பாய் மன்னித்து

ஆபத்துன்னை ஆட்படுத்தும்
அங்கு யார்தான் வருவார் ஆட்கொள்ள...?
இலாபம் என்றவன் தரும் இன்னல் நீங்கி
இன்புடன் வாழ அன்புடன் இரு
என்றும் அன்புடன் இரு...........

எழுதியவர் : ஜெகன் (16-Feb-15, 1:51 pm)
Tanglish : endrum anbudan iru
பார்வை : 619

மேலே