ஏகாந்த பூனைகள்

இந்த இரவுப் பூனைகள்
ஏமாற்றி விடுகின்றன..
அவைகள் சண்டையிட்டு கத்தி
தூக்கம் கெடுக்கும் போதெல்லாம்..
திடுக்கிட்டு எழ வைக்கின்றன
குழந்தை அழுகின்ற சப்தம் போல் கத்தி!

அடுக்களை சன்னல்கள் திறந்திருக்கும்
இரவுகளில் திருட்டுத்தனமாய்
பால் குடித்து குப்பை தொட்டியை
கிளறிக் கவிழ்த்து
சாபங்கள் வாங்கி செல்கின்றன..

அதோடு அவைகள் ஓய்வதில்லை..
தேர்வுக்கு செல்லும் மாணவன் முன் செல்வதும்
கடன் கிடைக்குமா என்று வங்கிக்கு செல்லும்
மனிதர் முன் பெண் பார்க்க போகிறவர்கள் முன்
என்று
விவஸ்தை இல்லாமல்
அங்குமிங்கும் குறுக்கே நடந்து அனைவரின்
எரிச்சலுக்கும் ஆளாகின்றன..

பிற்பகலில் வயிறு வீங்கி
கண்கள் மூடி
போலித் தூக்கம் போடுகின்றன..
பின் சோம்பல் முறித்து எழுந்து நடந்து
முறைத்து பார்த்து நாளை கடத்துகின்றன..
அவைகளுக்கு வேலை
வேறென்றும் பெரிதாக இல்லை !

எழுதியவர் : பாலகங்காதரன் (16-Feb-15, 7:42 am)
சேர்த்தது : பாலகங்காதரன்
Tanglish : egaandha poonaigal
பார்வை : 51

மேலே