நீ, நான், நிலவு

நானும் நீயும் இந்த நிலவும்
ஏதோ சொல்லுது
மயக்கம் ஏன் வருது!
சொல்லு சொல்லு என்னது அது!
சுழலும் கண்களில் மின்னும் அது!
அள்ளி முடித்த கூந்தலும்
அவிழ்ந்து வீழும் ஏன்அது?
ஆசை மட்டும் நெஞ்சினுள்
அடங்கி விம்முது ஏன் அது?
யாரும் இல்லா நேரம் இது
எதற்குன் முகத்தில் பயமுண்டு ?
சேரும் வண்டு மலர் கண்டு
சிந்தனை விட்டுச் சேர் இன்று!

============= ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-Feb-15, 10:11 am)
பார்வை : 64

மேலே