காதல் சுகமானது

சிறகுகள் முளைத்து
காற்றை கிழித்து
விண்ணில் பறக்க
நீ பறவையும் அல்ல
நான் காற்றும் அல்ல

துள்ளி குதித்து
பயந்து மிரண்டு ஓட
நீ புள்ளி மானும் அல்ல
நான் பாயும் புலியும் அல்ல

மொட்டாய் அரும்பி
மலராய் மலர்ந்திட
நீ மலரும் அல்ல
நான் வண்டும் அல்ல

பால் வெளியில் உலவ
முழு மதியாய் ஒளிர்ந்திட
நீ நிலவும் அல்ல
நான் இரவும் அல்ல

ஆழ கடலிலே
காற்றின் போக்கிலே
அசைந்து சென்றிட
நீ ஓடமும் அல்ல
நான் துடுப்பும் அல்ல

காதல் கரைதனிலே
மனதின் அலைதனிலே
இரு இதயங்கள்
சேர்ந்து மகிழ்ந்திடும்
நீ + நான் =காதலர்கள்

எழுதியவர் : கவியாருமுகம் (16-Feb-15, 10:41 am)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே