♥♥♥ சொல்லவா என் காதலை♥♥♥

உன்னை நன்கு நான் அறிவேன்
என்னை நன்கு நீ அறிவாய்
பால்ய சிநேகிதம் என்றால் - சும்மவா..!

சின்ன சின்ன பரிசுகளை பரிமாறிக்கொண்டோம்
பெரிதாய் மனது பரிமாறிக்கொண்டதை
அறியாமலே...!

நெடுநேர பேச்சில் ஓர் போதும் நேரத்தை
நானோ இல்லை, நீயோ பார்த்ததேயில்லை
பேச்சில் சுவாரசியம் குறையவும் இல்லை..!

என்னை கண்டு நீ புன்னகை கனிக்கும் போது
தலைசாய்த்து உன் தோளில் பூக்கவைப்பாய்
ஏன் நான் சூடிக்கொள்வேன் என்றா..!

அருகில் வருவேன் உன்னிடம் காதலை சொல்ல
நெருங்கி வருவாய் என்னிடம் - நொருங்கிப் போவேன்
உன் அழகிலும் உன் சுவாச காற்றிலும்..!

உன் பார்வையில் காதலை உணர்ந்தேன் - ஏனோ
அதனை உன் உதட்டில் காண ஆசை எனக்கு
உனக்கும் அதில் ஆசை என்று நான் அறிவேன்..!

இதோ இன்று நீ என் அருகில்
உன் கழுத்தில் நான் தந்த மாங்கல்யம்
தோள் சாய்ந்து கேட்கிறாய் என் காதலை

இன்றுவரை நீயோ நானோ
காதலை சொல்லியதே இல்லை
காதலை நாமாக வாழ்வதால் என்னவோ...!

ஃ தங்கம்

எழுதியவர் : தங்கம் (16-Feb-15, 11:55 am)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 69

மேலே