தேரில் வராத தேவதைக்கு

ஊதாப் பூவே - கண் சிமிட்டி
****உள்ளம் கலந்தவளே - இந்த
உலகைக் கரைத்து - என்னுள்
****ஊற்றி நிறைத்தவளே
உணர்ச்சிகள் குதித்தாடும் - மன
****ஊர்வல நெரிசலில் - என்
ஊமைப் புலம்பலுக்கு - உன்
****வழியைத் திறந்துவிடு


நேற்றின் ராகங்களை - புது
****நேச கீதங்களை - நீ
காற்றில் கரைத்துவிட்டால் - அந்தக்
****காதல் என்னாவது?

கால காலங்களை - வெல்லும்
****கவிதைகளைத் தந்தேன் - கவிக்
கனவுகள் தீப்பிடித்தால்- சுமந்த
****கண்கள் என்னாவது?

காதல் திருச்சபையில் - படித்த
****வேத வரிகளெலாம்
தீதென நீயுணர்தால் - புரிந்த
****தவங்கள் என்னாவது?

நிலாவின் கீழ் நினைத்த- அந்த
****நினைவுகள் என்னாவது ? - உன்னில் நான்
உலா காலங்களில் - விதைத்த
****உண்மைகள் என்னாவது?

தாகங்களைக் குடித்து - தவித்த
****தவிப்புகள் என்னாவது? - விழி
ஈரங்களில் குளித்து - துடித்த
****துடிப்புகள் என்னாவது?

கண்களிலே விரியும் - என்
****கேள்விகள் என்னாவது? - அடீ
கண்ணீர் நெய்யூற்றி - வளர்த்த
****வேள்விகள் என்னாவது?(1994)

(,தரையில் இறங்கும் தேவதைகள் ' நூலிலிருந்து . ..) எழுத்தில் மறு பதிவு)

எழுதியவர் : கவித்தாசபாபதி (16-Feb-15, 5:40 pm)
பார்வை : 69

மேலே