கால் இல்லாக் கணவனின் ஏக்கம்
கூட மேல
கூட்வைத்து
குப்பத்துக்குப்
போன புள்ள
கூட மேல
வைத்துப் போன
தோடையெல்லாம்
வித்துப்புட்டு
வந்தபுள்ள.............
நீ மெஞ்சையிலே
கூட கொஞ்சம்
ஆடலையோ
என் சின்னப்
புள்ள................
நீ தோடம்பழம்
கொடுகைகையிலே
அவன் தொட்டு
விடப் பார்க்கையிலே
ஒத்த விரல் நீட்டி
கட்டியவன் என்
பெயர் கூறி
மிரட்டல் விட்டாயா
புள்ள இல்லை
மனசி வலிச்சு
காயம் பட்ட
வடுக்கள்
தாங்காமல்
கலங்கி நின்றாயா
புள்ள.................
தோட எடுக்கத்
தோட்டம் போகையிலே
ஜாக்கிரதை ஜாக்கிரததை
அங்கும் சாக்குக் கட்டில்
இருக்கு ஜாக்கிரதை.......
வெள்ளந்தி மனசி
புள்ள உனக்கு
விதைத்து விடுவான்
விஷச்செடியை
பத்திரமாக வந்து விடு
பத்திணியாக
வந்துவிடு...............
தோடம் பழம்
உரிப்பது போல்
அவனுங்க தோலை
உரிக்க இயலாத
கை ஏலப்புருஷன்
நான் கண்மணியே
கண்மணியே.............
உருட்டி மிரட்டி
அவன் உன்னை
இழுத்தால் ஓடி
வந்து புரட்டிப் புரட்டி
உதைக்க முடியத
முடவனடி நான்.........
அந்தி சாய்யும்
முன்னே நீ
வந்து விடு
மந்திரியாக நான்
உரைக்கும் புத்தியை
நினைவில் நிறுத்தி
விடு என்னவளே..........
கஞ்சி குடிக்க
வேறு வழி இல்லை
என்று வஞ்சி உன்னை
அனுப்பி விட்டு
பஞ்சு மேல் நெருப்பாய்
நான் எரிகின்றேன்
என் நெஞ்சமெல்லாம்
உன் நினைப்புத்தான்
புள்ளம்மா.
இன்னும் நான் கூற
ஒன்றும் இல்லம்மா.............