இலைஇல்லை இல்லை
மரத்திடம் சொல்லாமல்
விழுந்தது அந்த இலை..
காற்றிடம் கேட்காமல்
அதனுடன் சென்றது..
யாரிடமும் சொல்லாமல்
ஓரிடத்தில் விழுந்தது..
..
உயர பறப்பதற்கும்
ஓரிடத்தில் இருப்பதற்கும்
இல்லாமலே போவதற்கும்
வித்தியாசம் அதற்கு இல்லை..
எதற்காகவும் அழுவது இல்லை
எதற்காகவும் குதிப்பதும் இல்லை
.அது .. இலை..
இல்லாமல் போவது..
நான்..இலையா..
இல்லை!
இருக்கிறேன் என்பதால்
இல்லை!