குற்றம்
இதமாய் வீசும் தென்றலும்
சூறாவளியாய் தெரியும்!
அழகாய் இசைபாடும் கடலும்
சுனாமியாய் தெரியும்!
அனைவரையும் சுமக்கும் மண்ணும்
பூகம்பமாய் தெரியும் !
உல்லாசமாய் துறும் சாரலும்
அடைமழையாய் தெரியும் !
ஓசையாய் ஓடும் நதியும்
வெள்ளமாய் தெரியும்!
ஆம் உண்மையே
எதிலும் குற்றம் மட்டுமே
காண்பவர்கள்.