காதலின் சாதனை சோதனை
இந்தக் காதல்
புரியும் சாதனை
ஒன்றா இரண்டா
எடுத்துக் கூற.
காதலை ஓவியமாகப்
பாடும் காவியம்
கவிஞனாக்கி கிறுக்க
வைக்கும்கவி
துடிக்க வைக்கும்
தவிக்க வைக்கும்
தனிமையில்
சிரிக்க வைக்கும்
பொய் உரைக்க வைக்கும்
பசியை மறக்கடிக்கும்
தூக்கத்தை
வெறுக்க வைக்கும்
நன்மை தீமை
இரண்டுக்கும் உள்ள
வேறு பாடை
மறைத்து வைக்கும்
கோபத்தை தூண்டும்
பாசத்தை அழிக்கும்
தந்தை தாயை எதிரியாக்கும்
துக்கி நிறுத்தி சிகரம் வரை
கொண்டு செல்லும்
அதிபாதாளத்திலும் தள்ளும்
போதையில் தள்ளாட வைக்கும்
தாடியுடன் நடமாட வைக்கும்
பேதையைக் கண்டால்
தள்ளி வைக்கும்
பலிவாங்கும் குணத்தை
வரவழைக்கும்
வாழ்க்கையைத் துளைக்கும்
பாதையை தடம் புரட்டிப் போடும்
கண் மண் தெரியாத காதல்
கல்லின் மேல்
முளையிட்ட செடியாய்
கருகி விட்டால் தன்னையே
அழிக்கும் நிலைக்கு
இழுத்துக் கொண்டு
நிறுத்தும்
கண் பார்த்து இதழ்
பேசி மனம் இடம்
கொடுத்து கனிந்த காதல்
இல்றத்தில் இன்பமாக பறக்க
இறக்கை விரித்துக் கொடுக்கும்
முதிர்ந்த காதல் கனியாகும்
உதிர்ந்த காதல் சருகாகும்
கசந்தாலும் துவர்ந்தாலும்
இனித்தாலும்
கசக்கி எறிந்த
காகிதமாக இல்லை
அன்றும் சரி இன்றும்
சரி என்றும் சரி
கல்லில் செதிக்கிய
சிப்பமாய் உலகில்
காதல் ஒரு சொப்பனமாக இனிதே
வலம் வருகின்றது
இனிமையாய்