என்னுடையது

இங்கேதான்
அஸ்திவாரங்கள்
எழும்புகின்றன..
வேர்கள் உறுதி பெறுகின்றன..
இடிந்த கோட்டைகளின்
இன்ப கனவுகள்
கலைய மறுக்கின்றன
புதிய காலைகள்
பூபாளம் ஒலிக்கின்றன ..
முகாரிகள்
முற்றுப் பெறுகின்றன ..
இங்கே
மரத்து போன
உணர்வுகள் உயிர் பெற்று
உறவாடுகின்றன..
இந்த இடம் தனியாருக்கு
சொந்தமானது..
அத்து மீறுபவர்கள்
தண்டிக்கப் படுவார்கள்..
..
என் மனம் !

எழுதியவர் : கருணா (16-Feb-15, 8:29 pm)
Tanglish : ennudayathu
பார்வை : 281

மேலே