எப்படி ஓடுது வாழ்க்கை
வாழ்க்கை
ஏதோ ஓடிக்கொண்டு
இருக்கிறது
என்பதில்லை. .
அது நடக்கிறது..
முன்னால் போன
கால்..பின்னாலும்
பின்னால் போன
கால்..முன்னாலும்..
இப்படியே
மாறி மாறி..
நடப்பது போலத்தான் ..
நடக்கிறது !
ரெண்டு காலும் ..
..எப்போதும்
முன்னாடியே போனாலும்
பின்னாடியே போனாலும்
விழத்தான் வேண்டும்..
அப்படி நடக்குமா..
அப்படித்தான்
சிரிச்சுகிட்டே
நடக்க கத்துக்கணும்..
ஒழுங்கா நடக்கணும்
என்று மட்டும் நினைக்கணும் ..!