அம்மா

பத்து மாதம் மடி சுமந்து இடுப்பு
வலி தாங்கியவளே!பிரசவ தருணத்தில்
எமன் விரித்த பாசக்கயிற்றில்,சுவனச்சோலை
சங்கமித்து கடவுளிடம் எனை வரம்
கேட்டு மறுஜென்மம் பிறப்பெடுத்து வந்தவளே!

பசி வந்து உதிரத்தை நான் கேட்க
மருமத்தில் எனையணைத்து பாலாக
தந்தாய்யம்மா!நான் உன் சேலையில்
கழித்த சிறுநீரையும்,மலத்தையும் அசுத்தம்
கருதாமல் தேகத்தில் புனைந்த தெய்வமே!
நான் வாழும் வரைக்கும் கோயிலுக்கு
போக மாட்டேன்,உன் காலடியில்
வணங்கிக்கிடந்தாலே போதும் ஆத்தா.

நான்கு கால் முதல் நடையும் நீதான்
சொல்லித்தந்தாய், அன்பை நெஞ்சில்
உறைய வைத்தாய்,உலகில் சொந்தக்காலில்
நிற்பதற்கு உன் பாதம் மேல் என் பாதம்
வைத்து கற்றுத்தந்தாய்,அம்மா உனக்கு
இந்தவுலகத்திலுள்ள பல்லாயிரம் தங்கக்கட்டிகளையும்
வைரங்களையும்,மரகதங்களையும்,இணையாக கூறமுடியாது.

ஈரமண் தோண்டி நான் விளையாடுகையில் என்
பாதத்தில் எறும்பு கடித்து கதறி அழுகையிலே!
என்னம்மா கண்கலங்கி தோளினில் அணைத்திடுவாள்.
வலிதிர்க்க நான் பட்ட காயத்தில் அவள் கண்ணீர்
முத்துக்களை சிந்திடுவால்.இறைவா! கைகோர்த்து
உன்னிடம் ஒருயுதவி கேட்கிறேன்,என்னுயிரை
எடுத்து மண்ணுக்கு இரையாக போட்டுவிட்டு
என்னம்மாவுக்கு சாவு வரத்தை இல்லாமே ஆக்கு!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (17-Feb-15, 12:44 am)
Tanglish : amma
பார்வை : 202

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே