மறையாமலிரு

காற்றுச்சிலுவை.
ஆம்
உன் சுவாசம்
கலக்காத
தென்றலும்
என் தனிமையைப்
புரட்டும் புயல்.
இத்திரையொரு
தடிச்சுவர்.
எனைப்பிரிந்த
உன்வலியும்
உனைப்பிரிந்த
என்வலியும்
ஒன்றல்ல
காதலா...
திரும்பிய பின்
திருமொழிவாய்
யாரைப்பார்த்தாலும்
நீயாகத் தெரிந்தாயென்ற
பழைய கவிநடையை.
யாருமில்லாமலும்
எனக்கு நீ தெரிகிறாய்
அசட்டுக் காதலா.
பலமுறை நீ கெஞ்சி
ஒருமுறை நான்
அனுமதித்தபின்னும்
பருகாமலே நீ
வைத்துவிட்ட
மதுக்குடுவையும்
பருகிவிட்டும்
தீராதென்
முத்தக்குடுவையும்
உனக்கான பரிசுகளாய்
சீக்கிரம் வா.
குறைந்தபட்சம்
இப்பெருஞ்சாளரத்தின்
எனக்குத் தெரியும்
உன் முகம் மீது
நான் முகம்
புதைக்கியிலாவது
மறையாமலிரு.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (17-Feb-15, 12:59 am)
பார்வை : 75

மேலே