மீண்டும் மேடாகிறது,,,
மீண்டும் மேடாகிறது,,,
======================
சாவியால் கிள்ளி சாறு வெடித்த
ஆப்பிள் துளைகளில்
சிறு வாய் முளைத்து ஹெலோ
சொல்கிறதைப் போல
உன் மூடியிருக்கும் புன்னகை
விரிகின்ற நேரங்களில்
எங்கோ இருந்து கையசைக்கிறேன்,,,,,
ம்ம்ம் நீ வரும் நேரம்
நானிருப்பேனோ இல்லையோ
மிளரி சாயம் குன்றியிருக்கும்
தரிப்புக் கம்பத்தில்
என் கவிதை இருக்கும்
வசித்து போ
நிரம்ப நிரம்ப பூத்திருக்கும்
என் காத்திருப்புகள்
மலர்ச்சரங்களாக உன் வருகையின்போது ம்ம்ம்,,,,
எதிர் வரும் காற்று,,
ரோஜா நட்டிருக்கும்,,
உன் கூந்தல் காட்டில் பட்டு
என் மீது மோதும் அந்த நிகழ்வுக்குப்பின்னால்
ஆயிரம் தேவதைகள் திரிவார்களே
ஆனால் நான் மட்டும் நினைவில்லாமல் ,,
நாணப்பட்டேனா என்றபோது
உலங்கூர்தி எழுவதைப்போலே
என் நா தொட்ட உன் கால்விரல்கள்
படப்படத்து தடுத்ததெல்லாம்
மீள் நிகழ்வுகளாய்
எங்கே திரும்ப சொல்லேன் என்று
நான் சொல்லிக்கேட்டிடத்தானா ம்ம்ம்ம் ,,,,
உன் நிறங்களில் அரங்கேற
ஒரு பணியிடமாற்றம்
அமிலமாற்றம் செய்கின்றபோதுமட்டும்
மேடுகள் சரிந்து
வில்லென வளைந்தது
ஒரு பசுமைப் பிரதேசம்!!!
கண்களோ காயாமரங்களான
அயர்ச்சியின்போதே
முறுக்கிய வேர்களில் இருந்து
ஹார்மோன்கள் சுரக்க
சாவி கிள்ளி சாறு வெடித்த
ஆப்பிள் துவாரங்களிலிருந்து
இருவரின் கலவையின் சாயலிலும்
கிளைகள் எட்டிப்பார்க்கிறன,,,,,,,,,,,
ஆனால் அவகாசம் பிடித்தப்பின்னாலும்
எல்லை மீறும் அந்த
நெரிசலில்லா குறுங்கோடு சாலையில்
மேலுமொருமுறை
நகர்வலம் செய்ய
மத்திமைக்கு யாத்திரை தடசம்
அமல் செய்கின்றாள்
வியர்த்த இலையின் நரம்புகளோ
மெல்லே மெல்லே
பச்சை நிறமிழக்கின்றன
தொங்குநிலை எரிமலைப்பள்ளத்தாக்குகளின்
தட்பவெப்பம் ஏற இறங்க
வளைந்தவைகள் எல்லாம் மீண்டும் மேடாகிறது,,,
அனுசரன்