பெண்ணுக்கு அழகு
கதிரவனுக்கு அழகு
உதிப்பதும் ,மறைவதும் !
மலருக்கு அழகு
மலர்வதும்,உதிர்வதும்!
தென்றலுக்கு அழகு
புயலும் ,அமைதியும் !
வீரனுக்கு அழகு
வெற்றியும் ,தோல்வியும் !
காதலுக்கு அழகு
ஊடலும் ,கூடலும் !
வாழ்க்கைக்கு அழகு
இன்பமும் ,துன்பமும் !
பெண்ணே !
உனக்கு அழகு
வெட்கமும் ,வெகுளியும் ...!