நிலவின் ராணி குழந்தையாம் - இராஜ்குமார்

நிலவின் ராணி குழந்தையாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மரணத்தின்
மிச்சத்தை
நிலாப் பொழுதுகளின்
நிஜங்களோடு கோர்த்து
நீரலைக்குள் நீந்தி
அருவிக்குள் அமைதியைத் தேடும்
ஆழ்மனத்தின் ஆசைகளை
விரல்களில் விரட்டும் விந்தை நீ ..

தேடலின் தாகத்தை
கற்பனைக் கிரகத்தில்
ஒளியின் வேகத்தில்
புதுமையைப் புரட்டி
அரியணையில் அமர்த்தி
கண்சிமிட்டும் கவிதனில்
வரிகளை வார்க்கும் வர்ணம் நீ...!

கணினி திரைகளின்
கதிரியக்க வீச்சினை
கைகளில் பிடித்து
தீமையைத் தவிர்த்து
திரும்பும் திசைகளில்
தென்றலோடு சுழலும் சுகத்தை
சுவடுகளில் பதிக்கும் சரித்திரம் நீ ..!

எட்டிய சிகரத்தில்
முட்டிய முகத்தினை
மேல்நோக்கிய முனைவுகளில்
எதிர்நோக்கும் எல்லாமும் - உங்கள்
உள்ளங்கை உணர்வாக - தம்பியின்
தேன்மொழி தேசத்தில்
வாடாத பூக்களை மெதுவாய் தூவி
உங்கள் உருவத்தின் புன்னகை
சிதறலை சிலையாக்கி ரசிக்கும்
தம்பியின் பிறந்த நாள் வாழ்த்தை
தங்கச் சிமிரில் தைத்து அனுப்புகிறேன் ..

அன்புடன் தம்பி
இராஜ்குமார்...

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (17-Feb-15, 5:53 am)
பார்வை : 200

மேலே