என் தோழியின் நட்பு

ஆமா ஆமா...!
பெரிய நட்பாம் நட்பு என்று ஒவ்வொரு அம்மாவின் குரல்.....
ஆம்,நட்பு தான் பெரிய நட்பு தான்...!
கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலே,இப்பிறவியின் பலனாய் அடைய பெற்றேன்,உன்னை...!
தோழியே...!
எங்கிருந்து வந்தாயடி...!
உன்னை நான் எதற்காக "தோழி"என்று அழைத்தேன் என்று தெரியவில்லை...!
அது,தான் "விதி"என்று நினைக்கிறேன்...!
உன்னிடம் பழகிய நாளிலிருந்து என் மனம் என்னிடமில்லை...!
ஆயிரம் குணங்களை புரிந்து கொண்டேன்...!
ஆயிரம் துயரங்களை பகிர்ந்து கொண்டேன்...!
கோவப்படும் ஒவ்வொரு நொடியும் சுகம் தான்...!
என்னை அரவனைக்கும் ஒவ்வொரு நொடியும் சுகம் தான்...!
உன்னை அடைந்த பலனாய்,உன் "அன்னையின்" அரவனைப்பையும் பாசத்தையும் அடைந்தேன்...!
அவள் தான் "அன்னை"முகம் தெரியாத ஒருவனிடம் பழகியதை கண்டிக்காமல் நட்பை பெரிதாக நினைத்தவள்...!
அவளின் மனதை புண்படும் படி நான் இதுவரை நடந்ததில்லை...!
என் மனம் சிதைந்த போது ஆதரவு தந்தவள்...!
அவளின் அன்பினை தினம் தினம் நினைக்கிறேன்...!
தோழியே...!
வழியின்றி அனாதையாக இருக்கிறேன்...!
நீ என்னை பிரிந்து சென்ற நொடியிலிருந்து...!
என் நிலைமை சிகரம் போல் உயர்ந்தால் கூட உன் நினைவுகளை நான் என்றும் மறப்பதில்லை...!
தோழியே...!
மொத்தத்தில் நீ இன்றி தவிக்கிறேன்...!
எங்கு சென்றாயடி...!
தினம் தினம் உன் நினைவுகளில் வாழ்கிறேன்...!
இக்கவிதையினை என் தோழிகள் இருவருக்கும் சமர்பிக்கிறேன்...!
என்றும் என் தோழிகள் நினைவாக...!

எழுதியவர் : அஜிக்கேயன் (17-Feb-15, 12:08 pm)
Tanglish : en THOZHIYIN natpu
பார்வை : 634

மேலே