சதியின் பெயர் விதி
சதியின் பெயர் விதி
கல்வியில் முதுநிலைப் பட்டம்
இலட்சத்தில் சம்பளம் கிடைத்தும்
முதிர் கன்னிகளாய்
இளநரை காற்றில் தவழ
வலம் வரும் எங்களுக்கு
வரன் கிடைக்க
வரம் கொடுக்கும் தெய்வமில்லை.
ஜாதியும் ஜோதிடமும்
எங்களுக்கு ஜென்ம விரோதிகள்
மனம் நொந்து நூலாகும்
பெற்றோர்கள் உடன்பிறப்புகள்
செய்வதறியாது நிற்கும் நிலை
விதியென்று சொல்வதைத் தவிர
வேறென்ன சொல்லமுடியும்?
பழமையின் பிடியில் நெளியும்
சமுதாயத்தின் சதிக்குப் பெயர் தான்
”விதி”யென்று சொன்னால் தப்பா?