என்ன செய்கிறாளோ இந்நேரம்
சித்திரை வெயிலின் கடுமை
நித்திரை கொல்லும் பேச்சு
மொத்தமாய் செலவழித்து
எட்டி தான் போனாளோ..
முன்னிரவில்..!
சந்திரன் உச்சியில்
நிசப்தமாய் நகரும் வேளை
என்.. நினைவினில் துயிலற்று
தரையினில் கிடைப்பாளோ ...
பின்னிரவில் ..!
விடிவதற்கு இன்னும் எத்தனை நாள்
ஆகுமென்று நகம்தனை
கடித்தபடி
நாட்காட்டி கிழிப்பாளோ..
விடியற் காலையில்!
சத்தியம் கையினில் அடித்து என்
முத்தமொன்றிற்கு முன் நெற்றியை
காட்டியே குளித்திடும்
வேளையில் நனைவாளோ..
இந்நேரம்..!