இதைப் படிக்கசொடுக்க வேண்டாம்
ஒழுக்கமும் அடக்கமும் கற்றுத் தராத பள்ளிக்கூடம்
ஓயாமல் பணம் செய்யக் கற்றுத் தருவதேன்...
திருக்குறளின் சுவையோ மலைத் தேன்...-அதைத் தவிர்த்து
திருட்டின் நுணுக்கம் கற்றுத் தேர்ந்தேனே நான்..
நட்பும் காதலும் நற்சான்று தராமல்
நாகரீக டேடிங் நல்லவன் ஆக்குகிறதே....
தன்னம்பிக்கை வளர்க்கும் இளமையெல்லாம்
தற்கொலைக்கு யோசனை செய்யும் விபரீதம் தான் ஏனோ...
வீரம் என்பதொன்றை முன்னிறுத்தியே
வீண் சதி செய்ய சரீரமெல்லாம் மூளையாகுகிறதே...
செய்யாதே என்பதொன்றை
செய்துப் பார்க்க துடிக்கும் வில்லனாகிறதே நம் மனம்...
(இதை சொடுக்கி விட்டீர்களே !)
இயற்கையை ரசிக்க படிக்காத நாம்...
தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நாம்
புத்தகங்களை மறந்த நாம்
உயிருள்ள பிணங்களே...