பேனா

கவியரசு கைகள் கவிகள் வார்த்திட
இலக்கிய தேசம் இனிதாய் காக்கப்பட்டது
உதிரம் உதிர்த்து சேவகம் செய்யும்
சாணளவு நீண்டு நிற்கும் செங்கோலால்...


மூங்கில் கழிகள் வன்முறை நீட்ட
விரல்கள் இடுக்கில் புரட்சி நடந்தது
கைகளில் அடங்கிடும் அகிம்சை விரும்பியுடன்
நவநீதன் கைகுழல் இசைக்கும் நாதமாய்...


ஏழுமலைகள் ஏழுகடல்கள் தூரம் கடந்து
ஏக்கங்கள் என்னவளை சேர துடிக்க
காகிதம் மாறியது காதலெனும் கடிதமாய்
எண்ணங்களை எழுத்தாய் வரைந்த பேனாவுடன்...


காற்றோடு சேர்ந்து காலங்கள் கரைய
அழகான நேரங்கள் அலைபோல் மறைய
சுகமாய் மலர்ந்த தருணங்கள் வாட
பொக்கிஷமாய் சேர்த்தது பேனாவின் மை...

எழுதியவர் : Monisha (19-Feb-15, 9:58 pm)
Tanglish : pena
பார்வை : 99

மேலே