பூத்துக் கொண்டே இருக்கிறது
பூத்துக் கொண்டே இருக்கிறது................!!!
விட்டுப்போன இடத்தில்
பட்டுப்போன மரமாய்
காத்திருக்கும் இதயங்களை
ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது
சிறு சாரல் மழை
ஒரு சாமக்கோடாங்கியின்
குரல் கேட்டுக்கொண்டு
விழித்திருந்தது
அன்றைய இரவில்
செவிகள் மட்டும்.
யாரையோ
புறக்கணித்துவிட்டு
விசும்பிக் கொண்டிருந்தது
காற்று.
சொல்ல வார்த்தைகளற்றுப்
போகும் போது
மௌனம் புதைத்து அழும் விழி...
வலிகள் நிரப்பிய
மரபுக் கோப்பைக்குள்
உற்சாக பானம்..
அருந்திக் கொண்டிருந்தது
கடவுள்.
விண்மீன் மழையாய் பொழிய
வானம் குடைதேடிக்கொண்டு
பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்
நிலவு கோபித்துக்கொள்வதாய்
முடிக்கிறேன்.