சிக்கு புக்கு ரயிலு வாழ்கை தகவல் சொல்லும் மெயிலு
சரக்கு வண்டி போகுதடா
சத்தம் தொலைதூரம் கேட்குதடா
கூட்டில் அடைந்த பறவைகளை
கூவி கூவி அழைக்குதடா !
இருட்டில் தூங்கி கிடப்போரை
அதட்டி எழுப்பும் அலறலடா !
விரட்டி எனை பிடித்திடுவென
வீரசபதம் போடுதடா !!
உறக்கம் தவிர்த்து ஓடிவந்தால்
எனக்கு முன்னே சென்றிடும் உன் வாழ்க்கையடா !
இதையறியா மனித மனங்களுக்கு
இதயம் இருக்கா ?கேட்குதடா!!
அழுத்தம் நிறைந்த மனதோடு
அழுது ஓடும் தொடர்வண்டி
இருட்டுநேரத்திலும் கண்திறந்து விருட்டென ஓடும் பாருங்கடா !
இளைப்பாற நினைத்தாலே முந்திவிடும் பின்வண்டி
உனக்கும் புரியும் இருந்தும் சொணக்கம் ஏனடா ?
கணக்குபோட்டு வாழ்க்கை வாழ்ந்தும்
கணக்கில்வரா செலவுகள் தொல்லை கூடுமடா
இருப்பைநினைத்து இருந்து உண்டால் இழப்புகள் கூடும் உண்மையடா !
இரட்டை கோட்டுக்குள் சீறிபாயும் தொடர்வண்டி
இறக்கை விரித்த பறவையடா - இருப்பினும்
கட்டுப்பாடு இடும் கட்டளை மீறாதோடுதடா !
மனிதவாழ்க்கையிலும் அதுபோல் உள்ளத்தை மதித்தால் மனிதம் வாழுமடா !
உனக்குள்ளே கொள்கைவகுத்து !அதற்குள்ளே வாழ்வை நடத்து !
ஓய்வெடுக்கும் காலம்வரை ஓடிகொண்டே நீயும் இரு !
இளைப்பாற நீயும் நினைத்தால் முந்திவிடும் உலகம் -அதற்காக
குறுக்குவழி செல்லமுயன்றால் விபத்து நேரிடும் நிச்சயம் !
(குறிப்பு :- இரட்டை சூரியன் வருகுதடா ஒற்றை தாமரை மலருதடா ...திரைப்பாடல் மெட்டில் அமைக்கப்பட்டது )