மேற்க்கில் தோன்றும் உதயம்

மணி காலை 7.30
சுரியன் தன் தொழிலை,
நேர்த்தியாக தொடங்கியது.
பள்ளிச்செல்லும் பிள்ளைகள் சாலையை நிரைத்திருந்தனர்.
ரோஜாக்கூட்டம் நடக்குமா இதோ எதிரே !
தனக்கு தெரிந்த ஹைக்குவை நினைத்து ரசித்தால், இலக்கியா.
தெளிவான முடிவா.
பாரதி வண்டியை திருப்பியவாறு
இலக்கியாவின் காலில் இடித்தான்.
ஒரு நாளாவுது இடிக்காமல் வண்டியை எடுக்குரிங்களா ?
இலக்கியா சிரித்தாள்,
ம்ம் கண்டிப்பா வேளைக்கு போரேன் , நிறைய யோசிச்சாச்சு.
பூருவத்தை உயர்த்தினால் இலக்கியா.
சாலை முழுவதும் கூட்டம்,
மக்கள் அனைவரும் எதோ ஒரு ஒருமித்த காரணதிர்க்காக மாரத்தான் ஒடுவது போல் ஒடிக்கொண்டிருந்தனர்.
இலக்கியாவிர்க்கு, இது ஒரு விடியோ கேம் பார்பதுப்போன்ரிருந்தது.
நேர்முக அறையில்
கனிசமாக ஒரு முப்பது நபர் இருந்தனர்.
இலக்கியா சுற்றி முற்றி பார்த்தால்.
ஒரு பெண் மட்டும் தனியாக தெரிந்தாள்
.
சிரான முகம், மிக சரியான சிகை அலங்காரம்.
ஒரு பார்பி பொம்மை சிரிப்பது போன்ரிருந்தது.
எதோ ஒன்று, வயது இருபத்தியெட்டு என்ரு சொல்லிற்று.
அவளும் இலக்கியாவை பார்த்து சிரித்தாள்.
புனிதா! நீ, என்றால் சிமிட்டலுடன்.
இலக்கியா! என்று கண்களை விரித்தேன்.
எச் அர் பழகிய புன் சிரிப்புடன் முன் வந்து நின்ரார்
எல்லோருடைய ரெசியுமும் வாங்கபட்டது.
நாங்கள் வந்த நோக்கத்தையும், அவர்களின் அமைப்பய்யும்’ எதிர்பார்ப்பய்யும்
வெளிப்படுத்தினர்.
இதற்க்குள் மதியம் வந்தது.
அனைவரையும் கேண்டீனிக்கு அழைத்து சென்றனர்.
இலக்கியாவும் புனிதாவும்ஒன்றாக நடந்தார்கள்
இருவரும் சகஜமாக பேச உணவு வேலை ஒரு காரணமாக இருந்தது.
ஏன் நீங்கள் இங்கு பரிமாரும் உணவு எடுத்துகொள்ளவில்லையா
இலக்கியா கேட்டாள்.
போர் என்று சிரித்தாள்.
எனக்கும், இது இலக்கியா.
சாதம் சாம்பார் என்று சமைக்கவும்,சாப்பிடவும் போர் என்றாள்.
உங்கள் கணவர் விரும்பமாட்டாரா? இலக்கியா புனிதாவை நோக்கினாள்.
புனிதா மழுப்பலாய் சிரித்தாள்.
அனைவரையும் சின்ன நேர்முகம் எடுத்து அமர வைத்தார்கள்.
புனிதாவும் இலக்கியாவும்தொழில் நிமித்தமாய் பேசிக்கொண்டிருந்தனர்.
வரான்டாவின் வெளியே யாரோ இரண்டு ஆண்கள் கடந்ததனர்.
இலக்கியா ஒரு நிமிடம் என்று கூறி வெளியே சென்றாள்.
இருவரும் அண்ணா நகர் டவரைநோக்கி நடந்தார்கள்.
இலக்கியா மறையும் வரை பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள்
புனிதா, யாரது, தெரியுமா? என்றாள்.
தெரியும்,கடந்துபொயாச்சு, நான் விட்டுட்டேன்.
எச் அர் அதே பழகிய சிரிப்புடன் முன் வந்து நின்றார்
ஒரு இருபது பெயரை சொல்லி நாளை காலை ஒன்பது மணிக்கு தேர்வுக்கு வருமாறு பணித்தார்.
புனிதா இலக்கியா இருவரின்பெயரும் இருந்தது.
நாளை ஒரு ப்ராப்லமும் இல்லை நேர்முக தேர்வுதான் என்று யோசித்தாள் பூனிதா.
ஏன் , இலக்கியா.
நான் திருமண வாழ்விர்க்குள்லில்லை.
ஏன் காதல் தோல்வியா?
அப்பா இல்லை. அம்மா சொந்தங்களின் உதவியுடன் ஏற்ப்பாடு செய்த திருமணம்.
திருமணம் அன்றுதான் நான்அவரை பார்த்தேன்.
பார்பதர்க்கு எனக்குகொஞ்சமும் சம்மந்தமில்லை.
என் சித்தி மகன் உதவியுடன் நான் வீட்டை விட்டு முதல் நாளே தப்பினேன்.
அவன் எனக்கு ஒரு வீடுபார்த்து தங்க உதவினான்.
உறவினர்கள் என்னையும் அவனையும் தவறாக பேசினார்கள்.
அவன் சக ஆண்களை போன்ரு இல்லைபடித்தவன் பெங்களுருக்கு வேலை பார்த்து சென்றான்.
உங்களுக்கு இந்த வாழ்க்கை கடினமாக இல்லையா.
ஒரு 25% கடினம் ஆனால் அதில் நான் ஜெயித்தால்,
பெண்கள் ஒரு சுமையில்லை, யார் இலவசமாககேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுப்பதர்க்கு என்று நிருபிப்பேன்
.
நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய்? பூனிதா வினவினாள்.
அழகு ஒரு பிர்ச்சனையில்லை.
நான் வேலை செய்த சில இடங்களில் அழகான ஆண்கள் எதாவது ஒரு விதத்தில் அர்பமாய் பார்திருக்கிரேன்.
நானாக இருந்தால்பார்க்காமல், பேசாமல் மேடை எரியிருக்கமாட்டேன்.
இலக்கியா யோசிக்காமல்பதில்லலித்தாள்.
சரிதான் என்று, பூனிதாஅமோதித்தாள்.
சரி நாளை பார்ப்போம், என்று வேகமாக வந்த பேருந்தில் ஏரினாள் பூனிதா.
அய்யோ புனிதா , இந்த சம்சார சாக்கடையில் ஆண்கள் அனைவரும் ஒன்ருதான், என்று, இலக்கியா தனக்குள் நகைத்தாள்.