காக்கைச் சிறகினிலே

காக்கைச் சிறகினிலே
காவியம் ஒன்று கண்டேன்!
காலத்தினால் மாறாத
சொந்தம் ஒன்று கண்டேன்!
கருமேகம் சூழ்ந்தாலும்,
கடுங்காற்று வீசினாலும்,,
கனமழைப் பொழிந்தாலும்,
கொடு மின்னல் மின்னின்னாலும்,
கிளை சேர்ந்த காக்கைக் கூட்டம்போல்
எத்தனை பேர் ஏசினாலும்
கல்லூரியே கதி எனும் ஒரு கூட்டம்!
ஒருபிடி சோறாயினும் இனத்தோடு உண்ணும்
காகம்தான் இவர்களும்!
கத்தி கத்தி இனத்தை எச்சரிக்கை செய்யும்
காகமாய் இவர்களும் பேராசிரியரின் வருகை கூறுவர்!
தன்னினத்தை விட்டுக் கொடுக்காத காகமாக
இவர்களும் நண்பர்களுக்காகவே!
ஒரு மரம்தான் காகங்களுக்கு கூடென்றால்
இவர்களுக்கு கல்லூரி தான் அது!
மழை விட்டதும் பறந்திடும் காகங்களாக
கல்லூரி படிப்பு முடிந்ததும் பிரிந்திடும்!
இன்னலென்றால் தன்னினத்திற்காக
அனைவரையும் அழைக்கும் காகமென்றால்
நண்பனுக்கு இன்னலென்றால் ஒன்று கூடிடும்
இவர்களும் !
இறுதிவரை இனம்பிரியாத உறவுப்பாலம்
நண்பர்கள் உறவு!
இது காக்கைப் போல் அமைந்தது சாலத்தெளிவு

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Feb-15, 3:13 pm)
பார்வை : 131

மேலே