செல்ஃபி

அவிழ்ந்து விழும்
அரைகால் சட்டையினை
பிடிக்க ஒரு கையும்,

அழுகின பழமாய்
ஒழுகும் மூக்கினை
துடைக்க மறு கையும்,

அன்பு நண்பன் தந்த
கமர்கட்டை வாயிலும்,

ஆசான் பக்கம் இருப்பதால்
அறை குறை பயத்திலும்,

ஆண்டிற்கு ஒருமுறை
கிடைக்கும் வாய்ப்பு என்பதால்
ஆடாமல், அசையாமலும் நின்று..!

போட்டோகிராபர் போட்டு தந்த
ஆட்டோகிராபுடன்,

இன்றளவும் என் வீட்டு முற்றத்தில்
இடம் பிடித்திருக்கும்,
இரண்டாம் வகுப்பு,
"பள்ளிப் புகைப்படம்" தரும் ஆனந்தம்,

ஆயிரம் முறை எடுத்து
அழகு பார்க்கும்,
இன்றைய அரை நொடி
"செல்ஃபி" தருவதில்லை.

எழுதியவர் : இந்திரன் (21-Feb-15, 8:23 am)
சேர்த்தது : ராஜ் இந்திரன்
பார்வை : 354

மேலே