உயிர்மொழி

உயிர் அனைத்திற்க்குமான
உயிர் மொழி!
உதிரம் உதிர்ந்து
உள்ளம் உடையும்போதும்
உதடுகள் முனுமுனுக்கும்
உயிர் மொழி! – கேட்டுப் பார்
தேசம் தொலைத்து வாழும்
நேசநெஞ்சங்கள் கூறும் தம்
மொழி காதலை!
பனிக்குடத்தின் மேல் விரல் பதித்து
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
தாயின் பரிசம் கேட்ட முதன்மொழி இந்த
உயிர் மொழி!
அகரமும் னகரமும் சொன்ன முதன்மொழி இந்த
உயிர்மொழி!
உணர்ச்சிப் பெருக்கில்
உள்ளம் குமுறும் மொழி!
பாசப் பெருக்கில்
பாலூட்டும் மொழி!
உறக்கத்தில் உலறும் மொழி!
நடுக்கத்தில் நா நவிலும் மொழி!
நல்லவரை நாவாரப் புகழும் மொழி!
கெட்டவரை நா கூசாது வசைபாடும் மொழி!
எம்மொழியினராயினும் உம்மொழியே
உனக்கு உயிர் மொழி!
உள்ளம் உருகப்பாடு உன்மொழியை
உயிருள்ளவரைப் போற்று உன்மொழியை!
உன்னையே நீ
விலைபேசுவதாகும் உன்மொழியை
அந்நிய மொழிக்கு அடிமைசெய்தல்!
மனிதா ஒன்றை மட்டும் மறக்காதே
உன்மொழியின் ஆயுள்தான் உன்
இனத்தின் ஆயள் - அதை
அழியாது காத்துக் கொள்!

இனிய உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள்!
“தாய்மொழியை கொண்டாடுவோம் நீண்ட
ஆயுள் பெறுவோம்!”

எழுதியவர் : (21-Feb-15, 11:04 am)
பார்வை : 220

மேலே