அதே இடம் அதே மனம்

மாலை 4 மணி பள்ளி முடிந்து பூமியில் கால்படாமல் ஓடும் மாணவரிடையே கோலுன்றி நடக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் செல்கிறான் . வழியில் ஒரு ஒருரூபாய் நோட்டு மடித்தபடி கிடக்கிறது .தாண்டிச் சென்றவன் அதையெடுத்து உதவிசெய்ய நினைத்து திரும்பி குனிந்து கஷ்டப்பட்டு எடுத்தவன் அதுகிழிந்த பாதி நோட்டு என்பதைக்கண்டு வீசிவிட்டு நகர்கையில் சில இளைஞர்கள் அவனைக் கண்டுசிரிக்க அவனும் சிரித்தபடி நகர்ந்தான். தம்பி தம்பி என்றகுரல் பின்தொடர திரும்பியவனுக்கு அதிர்ச்சி.. அழைத்த பெண் இவனை நோக்கி 'நீ நொண்டியா இருக்கும்போதே இவ்வளோ திமிரா இருக்க நல்லாயிருந்திருந்தா என்னெல்லா செய்திருப்ப .அதனாலதான்ட கடவுள் இப்படி படைச்சிட்டானு' திட்ட இவன் தான் எந்தத் தவறும் செய்யவில்லையே . அப்பரம் ஏன் திட்டினாங்க என்ற மனவேதனையுடன் வீட்டையைகிறான்

மனவேதனையுடனேயே இரவுமுடிய . மறுநாள் மாலை பள்ளிமுடிந்த வேளை . நேற்று திட்டுவாங்கிய இடத்தை கண்களங்கியபடி கடக்கிறான் .மீண்டும் "தம்பி தம்பி" குறல்கள் கேட்க பதற்றத்துடன் நகர்ந்தான் . சில இளைஞர்கள் அவனிடம் வந்து "நேற்று பாதிரூபாய் நோட்டைப் போட்டு கேளி செய்து கொண்டிருந்தது நாங்கள்தான் . அந்தப்பெண் நீ கேலி செய்ய பாதிரூபாய் நோட்டை போட்டதாக நினைத்து உன்னைத்திட்டினார்" மன்னிப்புக் கேட்டனர் . தவறுகள் செய்பவர் பலர் நலமாக இருக்க செய்த தவறு தெரியாமல் தண்டனை அனுபவிப்பது தம்மைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அனுபவமில்லை என பதில் கூறி நகர்ந்தான் . இப்போது மனக்குழப்பம் இளைஞர் மனதிற்கு இடம்பெயர்ந்தது . அதே இடம் அதே மனம்

எழுதியவர் : moorthi (21-Feb-15, 1:22 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 177

மேலே