நீலக்குயில் தேசம்23---ப்ரியா
அம்மாவின் சொந்த ஊருக்கு போறதுக்கு தாத்தா மட்டும் தான் தடங்கல்னு நினைச்சிட்டிருந்தேன் ஆனால் இன்றுதான் முழு விஷயமும் தெள்ளத்தெளிவாக புரிந்தது ப்ரியதர்ஷினிக்கு...........சரி இதற்கு உடனே ஒரு முடிவு கட்டவேண்டுமென தீர்மானித்தாள் அவள் அதற்கு தாயிடம் கருத்துக்கேட்டால் சரியா இருக்காது நாம் தான் ஏதாவது திட்டம் போடணும் என்னப்பண்ணலாம் என யோசனையில் அங்குமிங்கும் நடந்தாள் அப்பொழுது கயலின் நினைவு வரவே அவளிடம் கேட்டிரவேண்டியதுதான் என முடிவெடுத்தாள் ப்ரியா.......!
கயலுக்கு கால்பண்ணி வீட்டில் நடந்த அனைத்தையும் சொன்னாள்........அப்படியே ஷாக்காகி கேட்டுக்கொண்டிருந்த கயல் சிறிது யோசனைக்கு பிறகு தன மனதில் தோன்றிய எண்ணத்தை சொல்ல.........வாவ் சூப்பர் இதயே செயல்படுத்திருவோம் தாங்க்ஸ் டியர்......என்று பரவசமானாள் ப்ரியா!! நடக்கின்ற அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கயலின் அம்மா ஒன்றும் புரியாமல் முழிக்க.........வெயிட் என்பதுபோல் சைகை செய்தவள் தன் தந்தைக்கு அழைப்பைக்கொடுத்தாள்..........
ப்ரியதர்ஷினியின் அழைப்பை எடுத்து பேசியவர் நலம் விசாரித்துவிட்டு என்னவென்று கேட்க.......சற்றும் தாமதிக்காமல் தன் அத்தை பேசியது முதல் அம்மா சொன்னது வரை படபடவென சொல்லிமுடித்தாள் முடித்தது மட்டுமல்லாமல் அப்பாவிடம் ஒரே கெஞ்சல் ப்ளீஸ் அப்பா ப்ளீஸ் பழையதெல்லாம் மறந்து தாத்தாவே இப்போது இறங்கி வந்து விட்டார் இனிமேல் நாம் முரண்டு புடிக்குறது சரி இல்லப்பா நம்ம குடும்பம் ஒன்னு சேருறதும் பிரியிறது இப்போ உங்க கைலதான் இருக்குதுப்பா என்று சொல்லி கிட்டத்தட்ட அழுதே விட்டாள்.........மகளின் வேதனை புரிந்தும் அவர் பதில் எது கூறாமல் அம்மாவிடம் போனைக்கொடு என்று சொல்லிவிட்டார்.
என்ன ராஜூ அவ சொல்றா?என்று தன் மனைவியிடம் கேட்டார்?
அது வந்து.........என்னங்க அது........என்று இழுத்தாள் ராஜலெட்சுமி.......
ஏய் உனக்கு என்ன ஆச்சி இப்டி தடுமாறுற உனக்கு என்ன விருப்பம் அத முதல்ல சொல்லு என்று தன் மனைவியின் யோசனையை கேட்டார் அவர்.
நீங்க என்ன முடிவெடுக்குறீங்களோ அதான் என்னோட முடிவும் என்று தீர்க்கமாய் பதிலளித்தாள் ராஜலெட்சுமி.
ராஜலெட்சுமியின் பதிலிலிருந்தே அவள் தன் மேல் எவ்வளவு மதிப்பும் அன்பும் வைத்திருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது அவருக்கு.......வேறு எதுவும் பேசாமல், சரிமா நான் இன்னும் 2மாதத்தில் வாரேன் வந்ததும் பேசி முடிவெடுப்போம் என்று சொன்னார்.
சரிங்க என்றவள்.....என்னங்க அப்பா வீட்டுல இருந்து கேட்டா என்ன பதில் சொல்றது என்று தயங்கி தயங்கி கேட்டாள்?
அது......ப்ரியதர்ஷினிக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்சா பிறகு வாரோம்னு சொல்லி சமாளி என்று அவர் ஐடியா கொடுக்க அதுவே சரி எனப்பட அப்படியே செய்தாள் அவள்.
ஆனால் ப்ரியாவுக்கு மட்டும் எதுவும் புரியவில்லை.
அம்மா அப்பா என்ன சொன்னாங்க என்றாள் உனக்கு எக்ஸாம்ஸ் முடிஞ்ச்சதும் போலாம்னு சொல்லிட்டாரு என்று சொன்ன தாயை அப்படி ஆவேசத்தில் சந்தோசம் பொங்க அணைத்து முத்தமிட்டாள்.
இவ்ளோ நாள் பொறுத்தோம் இன்னும் 2மாதம் தானே..... ஐ அப்புறம் நம்ம அம்மாவோட சொந்த ஊருக்கு போகப்போறோம் தாத்தா பாட்டி கூட இருந்து என்ஜாய் பண்ணப்போறோம் என்று கத்தினாள் ப்ரியா.........தன் அண்ணனுக்கும் குறுந்தகவல் அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள் அவளின் இந்த சந்தோஷம் இவளை ஏதோ செய்தது மனதிற்குள் கடவுளே எல்லாம் நல்ல படியாய் அமையட்டும் என் குடும்பமே சந்தோசமாய் இருக்கணும் முக்கியமா என் புருஷன் மனசு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
________________________________________________________________________________________________________________________________
கடற்கரையில் நடந்த சம்பவங்களை நினைத்துப்பார்த்த கயலுக்கு எரிச்சலாகவும் கோவமாகவும் இருந்தது ராகேஷ் என் இப்படி நடந்து கொண்டான் ச்சே....இப்படி எல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல அதுவும் ப்ரண்ட்ஸ் பக்கத்துல ஏன் இப்படி??என்று மனதிற்குள் எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தாள்.......அதற்குள் ராகேஷிடம் இருந்து 34 அழைப்புகள் மற்றும் சாரி சாரி என்று பல மெசேஜும் வந்து விட்டது இவள் கண்டுகொள்ளவே இல்லை மொபைலை அணைத்து வைக்கலாமா?என நினைத்து கையில் எடுத்தவள் ஷீபாவின் மெசேஜைபார்த்ததும் என்ன என எடுத்தாள்......."உடனே என் வீட்டுக்கு வா" என ஷீபா தகவல் அனுப்பிருந்தாள் சரி என அவளைக்காண சென்றாள்.
அங்கு தோழிகள் இருவரும் இவளை சூழ்ந்து நடந்ததைப்பற்றி எங்களுக்கு தெரியும் அவன் உன் மேல உள்ள உரிமைலதானே அப்டி பண்ணினான் அதுக்காக இப்டிதான் பண்ணுவியா கால் மெசேஜ் எதுவும் அட்டன்ட் பண்ணலியாம் ஏன்டி?இப்டி இருக்கிற?அவன் எங்களுக்கு போன்பண்ணி வருத்தப்படுறான் எங்களாலேயே அவன் பீல் பண்றத தாங்கிக்க முடில அப்படி என்னடி நெஞ்சழுத்தம் உனக்கு நீ அவன உண்மையிலேயே காதலிக்கிறா தானே? அப்புறம் ஏன் இப்டி வீம்பு???? என்று........ அவர்கள் கயலைக்குற்றப்படுத்தி பேசினார்கள்.
தன் தோழிகளின் பேச்சு வெளிப்படையில் சரி எனப்பட்டாலும் இவளைப்பொறுத்தவரை அது தவறுதான்...........அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தவள் ஒர்க்கட்டத்தில் கோவம் வரவே.......சரி இப்போ அவன்கிட்ட பேசணும் அவ்ளோதானே பேசுறேன்.
இதுக்குதான் என்ன கூப்டியா இல்ல வேற எதாச்சும் உண்டா என்று கேட்டாள் கயல்??????
ஒன்னும் இல்ல அந்த பையன் பாவம் பேசு வீம்பு பண்ணாத என்று அறிவுரைக்கூறி தோழிகள் அவளை அனுப்பி வைத்தனர்.
தோழிகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டவள் அவனிடம் பேசினாள்......அவனும் மன்னிப்புக்கேட்டுக்கொண்டான் இனிமேல் இப்டி நடந்துக்கமாட்டேன் என்று சத்தியமும் பண்ணினான்......சரி அதவிடு என்றவள் இன்னும் 40நாளில் கல்லூரி முடிவடையப்போகிறது எக்ஸாம்ஸ் எல்லாம் இருக்குது முதல்ல நல்லா படி அப்புறம் உள்ளத அப்புறம் பார்த்துக்கலாம் என்னதான் நான் உனக்கு உன் வாழ்வில் சரி பாதியாக இருந்தாலும் இப்போதைக்கு அளவுக்கு மீறி என்னிடம் உரிமை எடுத்துக்காத சரியா?அப்புறம் நிறைய கஷ்டங்களை இரண்டுபேரும் சந்திக்கவேண்டி வரும் பார்த்து நடந்துக்க உன் கையில்தான் இருக்குது என்று தன் மனதில் பட்டதைப்பேசினாள் கயல்.
சரி என்று அமைதியாய் பதிலளித்தான் ராகேஷ்.
அடுத்த வாரம் டூர் போகப்போறாங்களாம் எந்த இடமெல்லாம்னு தெரியுமா?என்று கேட்டான் ராகேஷ்..?
தெரில.....உனக்கு?என்று கேட்டாள்?
ம்.....என்றவன் இடங்களின் பெயர்களை சொன்னான் அந்த இடங்கள் இவளுக்கு உடன்பாடில்லாமல் இருந்தது....ஆனால் கடைசியில் "நீலமலை" என்று அவன் சொன்னதும் அப்படியே ஆச்சர்யமாய் கண்கள் விரிய அவனைப்பார்த்தாள் கயல்விழி........!
தொடரும்ம்..........!