காதல் - உதயா

நான் பதினொன்னாவது படிசிகிட்டு இருந்த என்னோட பத்தாம் வகுப்பு தோழி ஒருத்தி தான் என்ன காதலிச்சா . அவளோட பெயர் மலர் .நான் அவல முதல் முதலில் நான் பாத்தா வகுப்பு சேரும்போது தான் பார்த்தேன் . ஒரு நான் பள்ளிக் கூடத்துக்கு போகும் போது பேனாவை வீட்டுலையே விட்டு போயிட . பேனா இல்லாம நா இருக்குறதை பாத்திட்டு நான் கேக்குறதுக்கு முன்னாடியே அவ பேனாவ கொடுத்தா .அதுல இருந்து தான் எங்களோட நட்பு ஆரம்பித்தது . நாங்க ரெண்டுபேரும் ஒரு சிறந்த நண்பர்களாய் இருந்தோம் . பத்தாம் வகுப்பு தேர்வும் வந்தது ரெண்டு பேரும் நல்லாத எழுதுனோம் அவ எங்க பள்ளிக் கூடத்திலெ முதலாவதாக வந்தா .நா இரண்டாவதா வந்த .அவள் முதல் மதிப்பெண்ணை எடுத்தாலும் நா முதல் மதிப்பெண் எடுக்காததுக்காக வருத்தப் பட்டா . நான் என் மனசுக்குள்ளவே நெனச்சிக்கிட்ட இவதான் எனக்கு நல்ல தோழி என்று ..

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே எதோ ஓரளவுக்கு கவிதை எழுவ அப்படி நாங்க ரெண்டுபேரும் ஒண்ணா இருந்த போது நான் எழுதியா முதல் கவிதை

காற்றுக்கும் நம் நட்பைக் கண்டு
பொறாமையென நினைக்கிறேன்
நம் கைகளின் இடைவெளில் புகுந்து
நம்மை பிரிக்க நினைக்கிறதே ....

உதயா சூப்பர் டா எப்படி டா இதுலா என கேட்டால் . எதோ தோணிச்சி சொன்னனு அவகிட்டா சொன்னேன் ....

மறுநாள் பள்ளிக் கூடத்துக்கு புது பயிற்சி ஆசிரியர் வந்து இருந்தாங்க ..எல்லாரும் அவங்க அவங்கள பத்தி சொல்லுங்க உங்கம் பேரு ஊரு அப்புறம் உங்களோட பொழுதுப் போக்கு சொல்லுங்கன்னு கேட்டாங்க எல்லாரும் சொல்லி முடிசிடாங்க கடைசியா நான் தான் டீச்சர் என் பேரு உதயகுமார் நா நவாப்பாளையத்துல இருந்து வரேன் .எனக்கு கிரிக்கெட் விளையாட புடிக்கும்னு சொன்ன...

திடீர்னு மலர் எழுந்து டீச்சர் அவ நல்லா கவிதை எழுதுவானு மாட்டி விட்டுட்டா .. அப்படியா உதயா ஒரு கவிதை சொல்லுனு டீச்சர் கேட்டாங்க .. அந்த டீச்சர் வேற ரொம்ப அழகா இருந்தாங்களா சரி என்ன சொல்லுறதுன்னு கொஞ்சம் நேரம் யோசிசிகிட்டே இருந்த டக்குனு ஒரு கவிதை சொன்ன

அன்பே
உன் அழகெல்லாம்
கொள்ளைப் போகிறதே
விண்ணில் நிலவாகவும்
மண்ணில் பூவாகவும்

எல்லாரு சிரிச்சிகிட்டே கை தட்டுனாங்க டீச்சர் கூட சூப்பர் தம்பி தொடர்ந்து எழுது உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்குனு சொன்னாங்க . ஆனா மலர் மட்டும் என்ன மொரச்சிகிட்டே இருந்தா மதியம் உணவு நேரம் இடைவேளை வந்ததும் .என் காதபுடிச்சி திருவி ஏன்டா நாயா டீச்சரையே சைட் அடிக்கிறியா டானு தலைமேலே கொட்டுனா .. நா சொன்ன இல்ல இல்ல மலர் நீதன மாட்டி விட்ட எனக்கு திடீர்னு அதா வந்துச்சி அதா சொன்னனு சொன்ன ..

உதயா என்கிட்ட போய்சொல்லாதடானு சொன்னா இல்ல மலர் நா பொய் சொல்லல . அப்புறம் அவ என்ன பாராட்டுனா எனக்கு உண்மையாவே அந்த கவிதை ரொம்ப புடிச்சி இருந்துசிடானு சொன்னா .
அவ என்மேல காட்டுன அன்பு அக்கறை எல்லாமே எனக்கு அவமேல காதலா மாறிச்சி ஆனா நா பள்ளிக் கூடம் முடிச்சதும் சென்னையில தான் கல்லூரிப் படிக்கணும்னு நெனச்ச அதனால அவகிட்ட நா காதல சொன்னா பிரியும் போது அவளா தங்க முடியாது என்னாலையும் தாங்க முடியாதுன்னு நெனச்சி அவகிட்ட சொல்லவே இல்ல

ஒருநாள் வழக்கம் போல ரெண்டுபேரும் பேசிகிட்டு இருந்தோம் .அவ உதயா எனக்கு உன்ன ரொம்ப புடிச்சி இருக்கு டா நா உன்ன காதலிக்குரடானு சொன்னா . எனக்கு அவல புடிச்சி இருந்து ஏய் என்ன சொல்லுற என்னால உன்ன காதல் பன்னலா முடியாதுன்னு சொல்லிட

உங்களுக்கு தெரியாது எங்க பள்ளிக் கூடதுலவே அவதான் ரொம்ப அழகான பொண்ணு . அவ என்ன பாத்துக் கேட்ட ஏன்டா முடியாது நா அழகா இல்லையா இல்ல நா நல்லப் பொண்ணு இல்லையானு .. நா என்ன சொல்லுரதேனு தெரியல நா எதுமே சொல்லாமே போயிட அவகிட்ட பேசவே இல்ல

மறுநாள் பள்ளிக் கூடம் போனேன் அவளும் வந்தா நா அவகிட்ட பேசவே இல்ல சாந்தரம் பள்ளிக் கூடம் முடிஞ்சதும் அவ ஓடி வந்தா உதயா நா என்ன தப்பு பண்ண சொல்லுடா ஏன்டா என்கிட்டே பேசாம இருக்க அதுக்கு நீ என்ன கொன்னுடு ஆனா பேசாம மட்டும் இருக்காதனு சொன்னா .. நீ என்ன காதலிக்க தேவையில்ல நாம பள்ளிக்குடம் முடிக்குரவரைக்கும் நல்ல நண்பர்களாக இருக்கலாம்னு அவ அழுதுகிட்டே சொன்னா எனக்கு அப்போவே காதல சொல்லிடலாமுன்னு நெனச்ச ..இருந்தும் என் மனசுக்குல எதோ ஒன்னு தடுத்துசி ...

நா அவகிட்ட சரி நல்ல நண்பர்களாக இருப்போன்னு சொன்னா நா வீட்டுக்கு போனது அழுத ..அப்படியே பதினொன்னாவது முடிஞ்சி 12-வது வந்துடுச்சி அவ என் மேல வெச்சி இருந்தா காதலோட அழாத நல்ல உணர்ந்துட .. 12-வது காடைசி நாள் தேர்வு முடிச்சி ரெண்டுபேரும் வெளிய வந்தோம் ..

அவ என்ன பாத்து ஒரு வார்த்தை கேட்ட உனக்கு மனைவியாகிற தகுதி எனக்கு இல்லையாட .நான் என்ன பண்ணா என்ன உனக்கு புடிக்கும்னு கேட்ட நா அப்போதே செத்துட அவ கண்ணுல கண்ணீர் கடல் போல வந்துசி அவ கடைசியா ஒன்னுமட்டும் சொன்னா

நா ஒரே ஒரு தடவ உன்ன கட்டிபுடிச்சி உன் தோள்ள சாஞ்சிக்கினும்னு சொன்னா என்னால மறுக்க முடியல சரின்னு சொன்னா ஓடிவந்து என்ன கட்டிப் புடிச்சி என் தோளுல சாஞ்சி அழுதா அவளோட கண்ணீர் என்னோட தேகமெல்லா பரவிச்சி

இதுக்கு மேலயும் காதலா நா சொல்லுலனா நா மனிசனே இல்லன்னு என மனசு சொல்லிச்சி ,, அவல கூப்ட மலர் மலர்னு அவ என்னடா சொல்லுனு என் தோளுலா சாஞ்சிகினே கேட்டா . i love you டின்னு சொன்னா அவ கண்ணுல வந்த சந்தோசத்துக்கு அளவே இல்ல அவ என் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தா ...

ரொம்ப நேரமா அவளோட உதடு என் கன்னதுலவே இருந்துச்சி ..நா மலர் மலர்னு அவல தட்டுன ஆனா அவ அந்த முத்தத்தோட என் மடியில பிணமாதா விழுந்தா அவள் என் மேல்கொண்ட அன்பும் காதலின் ஆழமும் எனக்கு அப்போதா புரிந்தது புரிந்தும் என்ன பயன் அவள் தான் எனுடன் இல்லையே ...கடைசியா என் உதடு அவள் உதடோடு இணைந்து அவள் பிரிவின் வலியை என் மனது சுமர்ந்தது .....

.

எழுதியவர் : udayakumar (21-Feb-15, 3:47 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 227

மேலே