சமுதாய சிதறல்கள்
சமூக அவலங்கள் பட்டியல் நீளுது !
சாட்டையடி தந்திட முடியா சட்டங்கள் ஓட்டை!
தாமதிக்கும் நீதியால் தப்பு கணக்குகள் பெருகுது !
உயர்ந்த மனிதரெல்லாம் உணர்வற்று கிடக்குது !
தேவைக்கு தகுந்தாற்போல் வேஷத்தை மாற்றிடும்
தலைவரும் தொண்டரும் வாழும் நாடு !
நம்பிக்கை ஒன்றை மனதில் புதைத்து
ஒன்றுக்கும் உதவா வாய்சாடலிங்கு...!
வாவென்று அழைத்தால் வருவோர் இல்லை
துணிந்து சென்றிட முனைந்தால் தலைவாசலே தடை !
தானே அணையும் ஒரு நாளென்று
தனக்கு தானே சமாதானமாகி...!
அங்கே மிஞ்சிய எலும்பு கூடுகள் கண்டு
அஞ்சியே சமாதிமுன் நீயும் மண்டியிட்டு
மாண்டவறெண்ணி மலரஞ்சலி தூவி வேண்டினால் போதுமா ?
போனவர் விழித்திட முடியுமா ?அதற்க்கேனும் இன்றே நீயும் விழித்திடு !
அடுத்தோர் உயிர் பிரியாது தடுத்திடு
இறப்பும் பிறப்பும் இயற்கை-உன்
இயலாமையால் போனால் அது செயற்கை
செயற்கைக்கு எதிராய் ஒன்றிணைந்திடு !
இன்றே இயற்கையை காத்திட முனைந்திடு !
குறிப்பு :தோழர் அரவிந்த் எழுதிய கவிக்கு கருத்தாய் பதித்த கவியிது