வனப்பு

அடர்காட்டுப் பூமரங்கள் அற்புதமாய்ப் பூத்து
படர்ந்து மணம்வீசி வைக்க - உடனதைக்
கண்டு முகர்ந்து களிப்புற்றுத் தேனெடுக்கும்
வண்டின் நுகர்ச்சி வனப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Feb-15, 10:18 am)
Tanglish : vanappu
பார்வை : 377

மேலே