கதவைத் திறந்தபோது

கதவைத் திறந்தபோது
காறித்துப்பியது
அணைக்க மறந்த
மின்விசிறி !

==================

கண்ணீர் விட்டழுதது
சரியாக
மூடப்படாத
தண்ணீர்க்குழாய் !

==================

கொதித்த பின்பும்
கொதித்துக் கொண்டிருந்தது
குழம்பு ........
கோபத்தோடு
கொளுந்து விட்டது
கேஸ் அடுப்பு !

==================

கரும்புகை விட்டு
எதிர்ப்புத் தெரிவித்தது ........
நடந்து போகும்
தொலைவுக்கு
நானெடுத்த
வாகனம் !

==================

ஓங்கி
மூக்கில் குத்தியது
மீந்து போன
உணவு !

==================

அப்படியே சரியாக
மரக்கிளை
முறிந்த சத்தம் .....
காகிதத்தைக்
கசக்கும் போது !

==================

வற்றிப் போன
ஆற்றில்
குழி பறிக்கிறார்கள்
மணலுக்காக !

==================

கடற்கரையில்
நண்பனொருவன்
"காற்று வாங்க
வந்தேன் "
என்றான் !
ஒரு நிமிடம்
அதிர்ந்து அடங்கியது
இதயம் !

எழுதியவர் : குருச்சந்திரன் (21-Feb-15, 6:00 pm)
பார்வை : 143

மேலே