குழந்தையாகியிருந்த அவள்
உனக்கேன் தயிர்சாதம்
பிடித்திருக்கிறது....?
அது............வெள்ளையா...
ம்ம்.. மல்லித்தழை எல்லாம் போட்டு..
பச்சையா...
மணிமணியா கடுகு கருப்போட...
சொல்லத் தெரியலடா...
அழகா இருக்கும் .... அவ்வளவுதான்...!!
ம்ம்... நீ ஏன்.. நீள நீளமாய்த்
தாவணிகளும்.. துப்பட்டாக்களும்
அணிகிறாய்..?
அது............. அம்மா
திட்டுவாங்க.. அப்ப வெரல்ல
வச்சி சுத்திக்குவேன்...
குழாயில் நனைச்சி
சிலேட்டுக் கோலம் அழிச்சிக்கலாம்...
அதுனால மட்டுமின்னு இல்ல..
புடிக்கும்...... அவ்வளவுதான்....
எல்லாமே அழகாய்த்தான்
இருந்தது நம் காதலில்...
நீ.... எல்லாம் அவ்வளவுதான்
எனச் சொல்லி
பிரிந்துபோன ஒன்றைத் தவிர......!!