விழித்திருப்பவனின் இரவு

புகையிழுக்கும் சுவாசம்..
புரண்டோடும் இசை..
புரையேறும் அறிவு..
புதிர்போடும் மௌனம்..
புற்றீசல் நினைவு..
புகழ்களோடு புணர்ச்சி..
பூக்காத புன்னகை..
புதியதாய் சிலகாயம்..
புத்தனாகும் முயற்சி..
புசித்துண்ணும் கனவு..
இருள் தொலைத்த வானம்..!

எழுதியவர் : கல்கிஷ் (22-Feb-15, 5:30 pm)
பார்வை : 186

மேலே